நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் முதல் தடையின்றி மின்சாரத்தினை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்றும், நாளையும் நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் M.R ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.