Connect with us

உள்நாட்டு செய்தி

பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: ஜனாதிபதி

Published

on

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இஸ்லாத்தில் முஹம்மது நபியின் பெயரைக் கொண்ட சுவரொட்டியை இழிவுபடுத்தியதாக தொழிற்சாலை ஊழியர்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் கணேமுல்ல பொக்குண சந்தியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரியந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்றும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் பிரதமர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.