Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியாவில் தங்கியிருப்போர் விரும்புகின்றபோது நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன: டக்ளஸ்

Published

on

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் விரும்புகின்றபோது நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட பிரதேச அபிவிருத்தியினை முதன்மைப்படுத்தும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாணத்திற்கான நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தியும் நீர் வேளாண்மை தொடர்பில் மிக அதிகளவிலான செயற் திட்டங்களை நாடளாவிய ரீதியிலும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக இன்று (17) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.