Connect with us

Sports

அவுஸ்திரேலியா ICC T20 சாம்பியனானது

Published

on

T20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதன்மூலம், முதல் முறையாக T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெற்றிக் கொண்டுள்ளது.

இறுதிப் போட்டியில் அவஸ்திரேலியாவின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.

இதனை தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக மிச்செல் மார்ஸ் தெரிவானார்.

தொடர் நாயகனாக டேவிட் வோனர் தெரவுச் செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி 8 ICC கிண்ணங்களை வென்று சாதனை படைத்துள்ளது.