உள்நாட்டு செய்தி
வடக்கு கிழக்கு என்ற பாகுப்பாடு காட்டப்படாது – பெசில்
வடக்கு கிழக்கு என்ற பாகுபாடு இன்றி நாடு என்ற ரீதியில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு இன்றி முன்னெடுக்கப்படுமெனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.