உள்நாட்டு செய்தி
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் யுவதி ஒருவரின் சடலம்

மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் இன்று (13) காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது