Connect with us

உள்நாட்டு செய்தி

வரவு செலவு திட்டம் – 2022

Published

on

2022 வரவு செலவு திட்டம் சௌபாக்கிய நோக்கினை முழுமையாக கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

நாம் கூறுவதை செய்யும் அரசாங்கம்.  தடுப்பூசி நடவடிக்கையில் எமது இலக்கை எட்டியுள்ளோம்.

நிதி அமைச்சர பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) முன்மொழியப்பட்டவை

•  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திறகான கால எல்லை 5 வருடத்திலிருந்து 10 வருட காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

• அரசாங்க அலுவலகங்களுக்கான புதிய கட்டுமானப் பணிகள் 2 வருடங்களுக்கு பிற்போடப்படும்.

• அரச நிறுவனங்களின் தொலைபேசிச் செலவுகள் 25 வீதத்தால் குறைக்கப்படும். சூரிய சக்தியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்படும்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் உள்ள திருத்தங்கள் மற்றும் முரண்பாடுகளை நீக்கி புதிய சம்பளக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வயது வரை நீடிக்கப்படும்.

• நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அவர்களுக்காக

• அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திறகான கால எல்லை 5 வருடத்திலிருந்து 10 வருட காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

• அரசாங்க அலுவலகங்களுக்கான புதிய கட்டுமானப் பணிகள் 2 வருடங்களுக்கு பிற்போடப்படும்.

• அரச நிறுவனங்களின் தொலைபேசிச் செலவுகள் 25 வீதத்தால் குறைக்கப்படும். சூரிய சக்தியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்படும்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் உள்ள திருத்தங்கள் மற்றும் முரண்பாடுகளை நீக்கி புதிய சம்பளக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வயது வரை நீடிக்கப்படும்.

• நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு ஓய்வு ஓதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியன் வழங்க உள்ளது.

• முச்சக்கரவண்டி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கின்றது. இத் துறையில் சுமார் 7 இலட்சம் முச்சக்கரவண்டிகள் நாட்டில் செயல்படுகின்றன. இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதந்காக அதிகார சபையொன்றும் அமைக்கப்பட உள்ளது

ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியன் வழங்க உள்ளது.

• முச்சக்கரவண்டி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கின்றது. இத் துறையில் சுமார் 7 இலட்சம் முச்சக்கரவண்டிகள் நாட்டில் செயல்படுகின்றன. இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதந்காக அதிகார சபையொன்றும் அமைக்கப்பட உள்ளது

• ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும்.

• நகர அபிவிருத்தி திட்டத்திற்காக 2000 மில்லியன் ரூபா நிதி.

• வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

• நடுத்தர அளவிலான தொழில் துறையை ஊக்குவித்து, கைத்தொழில் துறையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மேல் மாகாணத்தில் இதற்கான விசேட ஒத்துழைப்பு வசதிகளை வழங்குவதற்காக காணி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

• அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

• பத்திக் மற்றும் கைப்பணி உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்காக 1000 மில்லியன் ரூபா நிதி.

• பால் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக 1000 மில்லியன் ரூபா நிதி.

• விவசாய தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

• உள்ளூர் கரிம உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதாவது, 2022ஆம் ஆண்டு உற்பத்தியை இலக்காகக் கொண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

• விவசாய தொழில் துறையில் 80 சதவீதமான இலங்கையர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் முதலீட்டுக்கான வசதிகளை மேம்படுத்தும்.

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் தோட்ட லயன் குடியிருப்புக்களை அகற்றி தனி விடுகளை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேபோல் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிகரெட் மீதான உற்பத்தி வரி உடனடியாக செயலுரு பெறும். 5 ரூபாயால் அதிகரிக்கப்படும்

மதுவரி உடனடி அமுலுக்கு வரும். இன்று மாலை அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும்.

விபத்துக்குள்ளாகும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படாத அனைத்து வாகனங்களையும் விடுவிக்க நடவடிக்கை. இவ்வாறு விடுவிப்பதற்குரிய வரி, அபராதப் பணம் அறவிபடப்பட்ட பின்பே விடுவிக்கப்படும். அதேபோல் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.