Connect with us

உள்நாட்டு செய்தி

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

Published

on

சீரற்ற வானிலைக் காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அத்துடன், கேகாலை , கண்டி, குருணாகலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றுவன்வெல்ல, ரம்புக்கன, அரநாயக்க, கேகாலை, மாவநெல்லை, புலத்ஹோபிட்டிய, வரக்காபொல, தெஹியோவிட்ட, கலிகமுவ, தெரணியகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்ப்பத்துவ, தொலுவ, யட்டிநுவர, உடப்பலாத்த, பஸ்பாகே கோரள, கங்கவட்டகோரள, உடுநுவர, கங்க இஹலகோரள ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், குருணாகலை மாவட்டத்தின், மல்லவப்பிட்டிய, அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல்ல, ரிதிகம, நாராம்மல ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.