உள்நாட்டு செய்தி
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று 31 ஆம் திகதி வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.து.