Connect with us

உள்நாட்டு செய்தி

இராகலை பகுதியில் வெள்ளம்: 22 பேர் பாதிப்பு

Published

on

நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததையடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.