உள்நாட்டு செய்தி
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனாவின் உதவி பாராட்டத்தக்கது

சீனா வழங்கும் தொடர்ச்சியான உதவிகளை வரவேற்பதாக பிரதமர் மஹிந்த ராஜாபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் சென்ஹோன் பிரதமரை நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சீனா வழங்கும் உதவிகள் பெருதவி எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
மேற்படி உதவிகளைப் போன்று இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க தயார் என சீன தூதுவர் கூறியுள்ளார்.