உள்நாட்டு செய்தி
பாடசாலை கொரோனா கொத்தனிக்கான முயற்சி – இராதா விசனம்

கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி உருவாகின்றது.என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அட்டனில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.