உள்நாட்டு செய்தி
நுவரெலியா, ராகல பகுதியில் தீ: ஐவர் உயிரிழப்பு

நுவரெலியா, ராகல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோரே இவ்வாறு தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆர்.ராமையா 55 வயது, அவரின் மனைவியான முத்துலெட்சுமி வயது 50, இவர்களின் மகள் டிவனியா வயது 35, குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மகனான ரவீந்திரன் வயது 30 உயிர்தப்பியுள்ளார்.
மேற்படி மகளின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.