உள்நாட்டு செய்தி
அட்டாளைச்சேனை மீனவர்கள் படகுகளில் ஏறி போராட்டம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளை முன்வந்து பார்ப்பதில்லை எனவும் சட்டவிரோத சுருக்குவலை செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகுகளில் ஏறி போராட்டம் ஒன்றை அட்டாளைச்சேனை கடற்கரையில் வெள்ளிக்கிழமை (24) மாலை முன்னெடுத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதன்போது மீனவ சங்கங்களின் சார்பில் கருத்து தெரிவித்த மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களுக்கும் தங்களுக்கு நல்லது செய்யும் மீன்பிடி பரிசோதகர் எஸ். பாபுவுக்கும் தொடர்ந்தும் மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரினால் அநீதிகள் நடந்துவருவதாக குற்றம் சாட்டினார்கள்.