உள்நாட்டு செய்தி
குளிரூட்டப்பட்ட ரயில்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை

நீண்ட தூர ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக, 550 க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட ரயில்களை இறக்குமதி செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர இதனைக் குறிப்பிட்டார்
இந்த நடவடிக்கையானது நீண்ட தூர பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.