Connect with us

உள்நாட்டு செய்தி

அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் – அமைச்சரவை இணை பேச்சாளர்

Published

on

பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியரகளின் சம்பள பிரச்சினைக்கு  தீர்வாக ,மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை இந்த மாதத்தில் இருந்து சம்பளத்துடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டை முழுமையாக தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பிட்ட வகையில் இவை நடை முறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *