Connect with us

உலகம்

காபூல் விமான நிலைய தாக்குதல்: இதுவரை 63 பேர் பலி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பு

Published

on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் இதுவரை 50 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய பிரதான அபே நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட பலர் காயம் அடைந்துள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

எனவே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.