Connect with us

உலகம்

ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தலிபான்கள் தடை

Published

on

ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சிகைத் திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் Helmand மாகாணத்திலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கு தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தடையை மீறுவோருக்கு தண்டனை விதிக்கப்படுமென தலிபான் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற உத்தரவு தமக்கும் கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலிலுள்ள முடி திருத்தும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.