Connect with us

உலகம்

அமெரிக்க படைகளுக்கு ஆப்கானிஸ்தானிலிருக்கும் ISIS படைகள் எச்சரிக்கை

Published

on

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் நேரத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமெரிக்கா தலிபான்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் அதாவது நாளை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் மற்றுமொரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவு படை தெரிவித்துள்ளது.

இதனால் அங்குள்ள அமெரிக்க படைகளையும் மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.

இதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்ளிட்ட 180 பேர் பலியாகியமை குறிப்பிடதக்கது.