Connect with us

உலகம்

தலீபான் தலைவர்களில் முக்கிய நபரான முல்லா அப்துல் கானியை அமெரிக்க உளவுத்துறை தலைவர் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்

Published

on

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு படைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் மீள அழைக்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெளியேற்றத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க போவதில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ள நிலையில் பைடன் இதனை கூறியுள்ளர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் .

ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து ஒகஸ்ட் 31ம் திகதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் இல்லையே விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்புபணிகள் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தலீபான் தலைவர்களில் முக்கிய நபரான முல்லா அப்துல் கானியை அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் வில்லியம் பர்ன்ஸ் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிறநாட்டு மக்களை வெளியேற்றுவதில் ஒகஸ்ட் 31ம் திகதிக்கு பின்னரும் கால அவகாசத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தலீபான் தலைவருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.