உலகம்
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கொல்லபட்டான்: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது.
அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இதில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் கூறியதாவது…
“ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்தது. இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கொல்லபட்டான் . நாங்கள் இலக்கை அழித்து உள்ளோம். பொதுமக்களுக்கு உயிர்சேதம் ஏதும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும்” என கூறினார்.