Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 7000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – சுகாதார வைத்திய அதிகாரி

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 7000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டடோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்…

“கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். 

அவர்களில் ஏறத்தால 11 ஆயிரம் பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுள்ளனர். மிகுதியான 7 ஆயிரம் பேர்வரை தடுப்பூசி போடாமல் இருக்கின்றார்கள். 
தடுப்பூசி திட்டம் ஒரு மாத காலம் நீடித்தும் அவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களிற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த நிலையில் இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்கு அவர்களின் வீடுகளிற்கு சென்று இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பூசிகளை செலுத்தவுள்ளோம்.

மாவட்டத்தில் விடுபட்டுள்ள 7000 பேருக்கும் தடுப்பூசியை செலுத்தும் வரை இத்திட்டம் முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்