உள்நாட்டு செய்தி
கொட்டகலை போஹாவத்த தோட்டத்தில் இப்படியொரு பூஜை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திம்புளை போஹாவத்த தோட்டத்தில் கோயில் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நேற்று (22) மாலை இந்த பூஜை வழிப்பாடுகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே குறித்த கோயில் கமிட்டிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் நேற்று (22) 54 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே.சுதர்ஸன் தெரிவித்துள்ளார்.