உள்நாட்டு செய்தி
இன்று முதல் ஆரம்பமாகும் விசேட தடுப்பூசி வாரம்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைஃசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை டோஸ்கள் இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
அதன்படி, 76 ஆயிரம் பைஃசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளது.
கட்டார் நாட்டுக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்றில் குறித்த தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது .
இதேவேளை நாட்டின் சனத்தொகையில் தற்போது வரை 14.7 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுக்கு நாடளாவிய ரீதியில் இன்று முதல் தடுப்பூசி வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுள் சுமார் 27 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசியை பெறாதுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்
தனிப்பட்ட காரணிகள் மற்றும் தவறான கருத்துக்கள் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுள் பலர் தடுப்பூசியினை தவிர்த்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன்காரணமாக தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே இன்று முதல் ஆரம்பமாகும் விசேட தடுப்பூசி வாரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு ராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் செயற்படும் விதம் தொடர்பில் அடிப்படையில் ஊரடங்கை நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.