Sports
இலங்கை வீரர்களுக்கு IPL வாய்ப்பு

இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள IPL போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
வனிந்து ஹசரங்க மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் இந்தப் போட்டித் தொடரில் றோயல் சலன்ஜர்ஸ் அணியின் (RCB) சார்பில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இந்தப் போட்டித் தொட ர் நடைபெறவுள்ளது.
அண்மையில் அபார திறமைகளை வெளிப்படுத்தி வந்த இரண்டு வீரர்களுக்கு இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.