உள்நாட்டு செய்தி
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை பொலிஸார் கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார ஆலோசனை வழி காட்டிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பொதுவாக தனிநபருக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை.
அவசர நோய் நிலையின் போது சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ளும் போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டார்.