Sports
ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முதல் தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார்.
23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.
6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாள் (07) நாளையாகும்.
கடந்த மாதம் 23 ஆம்; திகதி ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் நீடிக்கின்றது.
சீனா 38 தங்கம், 31 வெள்ளி, 18 வெண்கல அடங்கலாக 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்கா 34 தங்கம், 38 வெள்ளி, 39 வெண்கலம் அடங்கலாக 105 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3வது இடத்தில் உள்ள ஜப்பான் 26 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலங்களுடன் மொத்தமாக 55 பக்கங்களை வென்றுள்ளது.