Politics
பஜ்ஜட் மீதான விவாதம் இன்று முதல்
இன்று முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று (17) முன்வைத்தார்.