உள்நாட்டு செய்தி
வருடத்தில் இதுவரை 10,150 டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தில் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் 10,150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆகக்கூடுதலான நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் எண்ணிக்கை 2,975 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 2,150 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 891 பேர் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலும் 572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.