உள்நாட்டு செய்தி
டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகளில் தாமதம்
ஹட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் தாமதமாகியுள்ளன.
டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்துடன், பிரதேச மக்களும் இணைந்து யுவதியை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நீர்வீழ்ச்சியில் வழமையை விட நீர் அதிகரித்துள்ளதால், தேடுதல் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மூன்றாவது நாளாக இன்றும் (21) தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.
நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி வழுக்கி வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
லிந்துலை, சென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.