உள்நாட்டு செய்தி
டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்த 19 வயது யுவதியை தேடும் பணிகள் தொடர்கின்றன

டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போன 19 வயது யுவதியை தேடும் பணிகள் இடம்பெற்று வருவ5தாக எமது செய்தியாளர் கூறினார்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (18) மாலை நண்பிகளுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது குறித்த 19 வயது யவதி நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயிருந்தார்.
லிந்துலை பகுதியில் வசித்த 19 வயதான யுவதியே நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.