உள்நாட்டு செய்தி
“டெல்டா வைரஸ் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் பரவலடையும்”

நாட்டில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் எதிர்வரும் இரண்டுவாரங்களில் மேலும் பரவலடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்
எனவே டெல்டா வகை வைரஸ் நாட்டில் தொடர்ந்தும் பரவலடைவதை தடுக்க வேண்டுமாயின் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது