Connect with us

உள்நாட்டு செய்தி

நாடு விரைவில் திறக்கப்படும் – பெசில்

Published

on

நாட்டை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாடு முடக்கப்பட்டமையால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து அரசாங்கத்திற்கு நிதி கிடைக்கும் வழிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பணம் கிடைக்கும் வகையில் கூடிய விரைவில் நாடு திறக்கப்பட வேண்டும் எனவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.