Sports
இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொவிட்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா அமதற்று உறுதியாகியுள்ளது.
எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 வீரர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர், ரிஷப் பந்த் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கிண்ண ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ரிஷப் பந்த்.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அறியப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 பேர்ட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 4 ஆம் திகதி நொட்டிங்காமில் ஆரம்பமாகவுள்ளது.