Connect with us

Sports

T20 உலகக் கிண்ண தொடருக்கான குழு விபரம், பரம எதிரிகள் ஒரே குழுவில்

Published

on

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வௌியிட்டுள்ளது.

2021 மார்ச் 20 ஆம் திகதி வரையான அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

தரப்படுத்தலில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், எஞ்சிய நான்கு அணிகள் தகுதிகாண் சுற்றின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளன.

தகுதிகாண் சுற்றின் முதலாம் குழுவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளும், இரண்டாம் குழுவில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்வுவா நியூகினியா, ஓமன் ஆகிய அணிகளும் விளையாடவுள்ளன.

இந்த குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் A குழுவில் அங்கம் வகிக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் B குழுவில் இடம்பெற்றுள்ளன.

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமனில் இந்தியாவின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், அபுதாபியிலும், ஓமானின் கிரிக்கெட் சங்க மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.