Connect with us

உள்நாட்டு செய்தி

அக்கரபத்தனை போபத்தலாவை காட்டுப் பகுதியில் விலங்கு இறைச்சிகளுடன் ஒருவர் கைது

Published

on

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவை காட்டுப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியாக்கி அதனை விற்பனை செய்து வந்தவரை அக்கரபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 08 கிலோ கிராம் இறைச்சி மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) மாலை அக்கரபத்தனை போபத்தலா மெனிக்பாலம் கால் நடை தேசிய பண்ணையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கால்நடை பண்ணையின் காவலாளி எனவும் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியிலே வனப்பகுதியில் மான், மறை, பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நீண்ட காலமாக குறித்த சட்ட விரோத நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட இறைச்சி, துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.