உள்நாட்டு செய்தி
மத்திய மலைநாட்டில் கடும் மழை
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்நிலப்பகுதிகள் சிலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் இவ்ந வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வீதியில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.
இதேவேளை கினிகத்தென தியகல நோட்டன்பிரிஜ் பிரதான வீதியிலும் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.