Connect with us

Sports

WTC கிண்ணத்தை கைப்பற்றியது நியூசிலாந்து

Published

on

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஸ் கிண்ணத்தை (WTC) வெற்றிக் கொண்டுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியே நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றிக் கொண்டுள்ளது.

அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் மற்றும் அனுபவ வீரர் ரோஸ் டெயிலர் ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டத்தின் உதவியால் நியூசிலாந்து அணி இந்த வெற்றியை ருசித்துள்ளது.

சவுதம்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

அதற்கமைய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அஜின்கேயா ராகானே அதிகூடிய 49 ஓட்டங்களை பெற்றதோடு நியூசிலாந்தின் பந்து வீச்சில் கையில் ஜேமிசன் 5 விக்கெட்டுக்களைவ வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி டெவோன் கொன்வே பெற்ற 54 ஓட்டங்கள் உதவியுடன் 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணியின் பந்து வீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுக்களையும் இசாத் சர்மா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்சில் இந்தியா 170 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்;டத்தில் ரிசப் பண்ட் மாத்திரம் அதிகூடிய 41 ஓட்டங்களை பெற்றதோடு, நியூசிலாந்தின் பந்து வீச்சில் டிம் சவுதி 4 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப்பெற்று வெற்றிப் பெற்றது.

அந்த அணி சார்பில் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் அனுபவ வீரர் ரோஸ் டெயிலர் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் அஸ்வின் மாத்திரம் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக கைல் ஜேமஜசன் தெரிவானார்.

இந்த போட்டியின் இரண்டு நாள் ஆட்டங்கள் மழையால் தடைப்பட்ட நிலையில் ஐசிசியால் மேலதிக ஆறாவது நாள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.