Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் மேலும் 1,633 பேருக்கு கொவிட்

Published

on

நாட்டில் மேலும் 1,633 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 220,556 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 186,516 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.