Connect with us

Sports

மெல்போர்ன் மால்கிரேவ் கிரிக்கெட் கழக பயிற்றுவிப்பாளராகின்றார்:சனத்

Published

on

இலங்கையணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும், தலைவருமான சனத் ஜயசூரிய அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மால்கிரேவ் கிரிக்கெட் கழகத்திற்கு பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

ஜயசூரிய தற்போது ஐசிசின் ஊழல் கட்டுப்பாட்டு பிரிவால் இரண்டு வருட போட்டி தடைக்குட்பட்டுள்ளார்.

இந்த தடைக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜயசூரிய தமது 22 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 110 டெஸ்ட் போட்டிகளிலும் 445 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடதக்கது.

திலகரத்ன டில்சான் அந்த அணியின் தலைவராக செயற்படுவதுடன் முன்னாள் வீரர் உபுல் தரங்கவும் அந்த அணிக்காக விளையாடவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *