Connect with us

Sports

இந்தியாவுக்கு ஒருமாத அவகாசம் கிடைக்குமா?

Published

on

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட கூட்டம் ஒன்று இன்று (01) காணொளி மூலம் நடைபெறவுள்ளது.

இதில் இந்த வருட இறுதியில் நடைபெறும் T20 ஓவர் உலக கிண்ண போட்டி குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் சபை சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்ளவுள்ளார்.

T20 இந்த போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு இராஜியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்து வருகின்றது.

எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆராய்ந்து தீர்மானிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பி.சி.சி.ஐ. சார்பில் இன்று ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஜூலை 18 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி.யின் வருடாந்த கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.