உலகம்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள முழு ஊரடங்கை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின் கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒருவாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.