Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published

on

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வரும் எதிர்க்கட்சித் த​லைவர் சஜித் பிரேமதாசவுடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஹெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஆகியோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், இன்றைய தினம் கொழும்பு மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மாத்தறை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவருக்கு கொவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை அறிய முடியவில்லை எனவும், பாராளுமன்றினுள் கொவிட் அவதான நிலை இல்லை எனவும் தெரிவித்தார்.