உள்நாட்டு செய்தி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது – WHO

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படுவது 12 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் 5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.