உள்நாட்டு செய்தி
நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு, இன்று 27,397 பேருக்கு கொரோனா

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழக அரசு இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
இதேவேளை, தமிழகத்தில் இன்று (08) 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 இலட்சத்து 51 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது.