உள்நாட்டு செய்தி
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,616,130

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,616,130 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தீநுண்மித் தொற்றால் புதன்கிழமை ஒரே நாளில் 2,102 பேர் இறந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 182,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,041ஆக உயர்ந்தது.
அதேசமயம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் 42 ஆவது நாளான புதன்கிழமை சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,57,538 ஆக உயர்ந்தது.
இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதமாகும். கொரோனா தொற்றுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85.01 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதுவரை இத்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,276,039 ஆக உள்ளது. அதேவேளையில் இறப்பு விகிதம் 1.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கொரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 60 இலட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் திகதி 70 இலட்சத்தையும், டிசம்பர் மாதம் 1 கோடியையும் தொட்டது.
ஏப்ரல் 19 ஆம் திகதி இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 கோடியைக் கடந்தது.