உள்நாட்டு செய்தி
சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்.
புத்தாண்டையொட்டி கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக இன்றிலிருந்து விசேட போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயணிகளின் வசதிக் கருதி மேலதிகமாக 21 ரயில்கள் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூர இடங்களுக்கான தனியார் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் பண்டிகைக்காலத்தில் அதிகரித்து காணப்படுவதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.