Connect with us

உள்நாட்டு செய்தி

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அஜித் மானப்பெரும

Published

on

வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகிமாகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற அமர்வு நேற்றுகாலை ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் இதனை அறிவித்திருந்தார்.

´சட்ட ஆலோசனைக்கு அமைய அரசியலமைப்பின் விதிமுறைகளுக்களின் படி 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(1) இற்கு அமைய 9ஆவது பாராளுமன்றத்தின் கம்பஹா தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஏ. ரஞ்சன் லியோ சில்வஸ்டர் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையானது அரசியலமைப்பின் 66 (D) இற்கு அமைய வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *