உள்நாட்டு செய்தி
வவுனியா வாள் வெட்டு

வவுனியா திருநாவல்குளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டுக்குழு ஒன்று இளைஞரொருவரை கடுமையாக தாக்கியுள்ளது.
வீதியால் சென்றவர்களை திருநாவல்குளம் பகுதியில் ஒரு குழு மதுபோதையில் தாக்கியுள்ளது.
அதன்போது இளைஞரொருவர் தனது தாயாரை ஏற்றிச்சென்ற சமயம் குறித்த குழு தாயார் மீதும் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக தாயாரை பாதுகாப்பான இடத்தில் இளைஞன் இறக்கிவிட்டு குறித்த மதுபோதை குழுவினரிடம் தாயாரை தாக்கிமைக்கு காரணம் கேட்க சென்றபோதே குறித்த குழு அவ் இளைஞனை கடுமையாக தாங்கியுள்ளது.
இதன் காரணமாக அவ் இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.