உள்நாட்டு செய்தி
“எனக்கு எதிராக போலியான திட்டமிட்ட பிரச்சாரங்கள்” – ஜனாதிபதி

தனக்கும், அரசங்கத்திற்கு எதிராகவும் போலியான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் முதலாவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு இன்று (03) வவுனியா வடக்கு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ…
“நான் ஜனாதிபதியானதும் வெள்ளை வேன் வரப்போகின்றது என்றனர். உடல்களை முதலைகளுக்கு தீணியாக போட போகின்றார் என்றனர். மக்களை தூக்கிச் சென்று மீன்களுக்கு இறையாக்க போகிறார் என்றனர். ஆனால் இப்போது சுற்றாடல் பிரச்சினையை கைகளில் எடுத்துள்ளளனர். எதனோல் பிரச்சினையே மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. எனக்கு எதிராக போலியான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் முக்கியமானவர் அல்ல மாறாக என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த கருத்துக்கள் அடங்களான சக்தியே முக்கியமானது. இதனை பாதுகாப்பது அவசியம்.” என்றார்.